உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிலுவை தொகையை வழங்க மாஜி ஊழியர்கள் கோரிக்கை

நிலுவை தொகையை வழங்க மாஜி ஊழியர்கள் கோரிக்கை

புதுச்சேரி : பணிக்கொடை நிலுவை தொகையினை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்பின்கோ ஓய்வு பெற்ற ஊழியர்கள் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து முறையிட்டனர்.திருபுவனை கூட்டுறவு நுாற்பாலையான ஸ்பின்கோ தொழிற்சாலையில் கடந்த 2022ம் ஆண்டு 40 ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட நிலுவை தொகைகள் வழங்கப்படவில்லை.இந்நிலையில் அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர். அப்போது ஊழியர்கள், பணிக்கொடை தராததால், ஓய்வுக்கு பிறகு மன உலைச்சலுக்குள்ளாகி வருகிறோம். பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடிவில்லை. இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு உதவிட வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, விரைவாக பிரச்னை தீர்க்கப்படும் என கவர்னர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி