எக்ஸ்போ பேட்டி...
பொருட்களின் சங்கமம்‘தினமலரின்’ வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சியில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. என்ன பொருள் வாங்குவது என்று தெரியாத அளவிற்கு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய முடிகிறது. ‘தினமலர்’ நிர்வாகத்திற்கு நன்றி. ரமணி, திலாஸ்பேட்டை.––––––––––––––––– விலை குறைவு;வீட்டு உபயோக பொருட்கள் அதிகளவில் அழகு, அழகாக குவித்து வைத்துள்ளனர். வெளி மார்க்கெட்டைவிட இங்கு பொருட்களின் விலை குறைவாக உள்ளது. குடும்பத்தோடு வந்து பொருட்களை வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பொழுதுபோக்கிற்கு நல்ல இடமாக தினமலரின் கண்காட்சி உள்ளது. விமல், உப்பளம்.–––––––––––––––––––– ஒரே இடத்தில் பல பொருட்கள்;புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் வந்தேன். ‘தினமலர்’ எக்ஸ்போ நடப்பது கேள்விப்பட்டு வந்து பார்த்தோம். பல இடங்களுக்கு தேடி சென்று அலையாமல் ஒரே இடத்தில் பொருட்களை வாங்கும் வகையில் ‘எக்ஸ்போ’ உள்ளது. பொருட்கள் தரமாகவும், விலை குறைவாகவும் இருந்தது. கோபாலகிருஷ்ணன், கரூர்.–––––––––––––––––––––– குளு குளு அரங்கம்;எக்ஸ்போவில் அதிகளவிலான பொருட்கள் உள்ளது. விலை குறைவாகவும், மலிவாகவும் உள்ளது. குளு குளு அரங்கில் உள்ள ஸ்டால்களில் நமக்கு தேவையான பொருட்களை பொறுமையாக தேடி வாங்கி செல்ல முடிகிறது. வீடுகளுக்கு தேவையான நல்ல, நல்ல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ரதி, முத்தியால்பேட்டை.–––––––––––––––––––––––– எங்கும் கிடைக்காதது இங்கு கிடைக்கிறது புது, புது மாடல்களில் பொருட்களை குவித்து வைத்துள்ளனர். அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், வெளியில் சென்று அலையும் நேரம் மிச்சமாகிறது. புதுச்சேரியில் கிடைக்காத வெளி மாநில பொருட்கள், தினமலர் எக்ஸ்போவில் கிடைக்கிறது. வெளியில் கிடைக்காத ஆபரும், இங்கு கிடைக்கிறது. சிவபிரகாஷ், நோனாங்குப்பம்.–––––––––––––––––––––––– புதுப்புது பொருட்கள் தினமலர் எக்ஸ்போவிற்கு மூன்று ஆண்டுகளாக வருகின்றேன். எக்ஸ்போவில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது. மக்களின் தேவைக்கு ஏற்ப பொருட்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால், புதுச்சேரி மட்டுமின்றி சுற்றுப்பகுதி பொதுமக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. ராஜி, கதிர்காமம்.––––––––––––––––––––– குட்டீஸ் பேட்டி.. ஜாலியாக இருந்தது;எக்ஸ்போவில் உள்ள அனைத்து கேம்ஸ்களும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஒட்டக சவாரி, அவதார், வாட்டர் போட் ரொம்ப ஜாலியா இருந்தது. ஸ்டாலில் அனைத்து பொருட்களையும் பார்த்து ரசித்தேன். ரொம்ப ஜாலியாக இருந்தது. லிஷாந்த், வைத்திக்குப்பம்.––––––––––––––––––––––– பொம்மைகள் அதிகம்;எக்ஸ்போ ஜாலியாக இருந்தது. குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள் அதிகளவில் இருக்கிறது. கேம்களில் விளையாடுவதற்காகவே நான் எக்ஸ்போவிற்கு வந்தேன். வாட்டர் ரோல் ரொம்ப ேஹப்பியாக இருந்தது. கபிலன், பண்டசோழநல்லுார்.––––––––––––––––––––––––– அவதார் பிடித்திருந்தது;குழந்தைகளுக்கு பிடித்த ஏராளமான கேம்ஸ்கள் எக்ஸ்போவில் உள்ளது. எனக்கு அனைத்து கேம்ஸ்களிலும் விளையாட ஆசையாக இருந்தது. அவதார் உலகத்தை பார்த்தபோது, நிஜமான அவதார்களை பார்த்ததுபோல ஜாலியாக இருந்தது. அவதார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆதிரா, முத்தியால்பேட்டை.