மேலும் செய்திகள்
தமிழகத்தில் 44 மகளிருக்கு ட்ரோன் இயக்க உரிமம்
09-Feb-2025
விழுப்புரம் : மகளிர் தினத்தில், பவ்டா கல்லுாரியில் சேரும் முதலாமாண்டு மாணவிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பவ்டா நிறுவனர் ஜாஸ்லின்தம்பி கூறியதாவது:உலக மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், பவ்டா குழுமம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பவ்டா கலை, அறிவியியல் கல்லுாரியில் 2025-26ம் ஆண்டில் சேரும் இளங்கலை மாணவிகளுக்கு, முதலாமாண்டு கட்டணம் இல்லாத கல்வி வழங்கப்படும். கல்வி, வேலை வாய்ப்புகளில், மக்கள் பிரதிநிதி பதவிகளில் அங்கம் வகிக்க, மத்திய, மாநில அரசுகள் மகளிர் வளர்ச்சிக்கு அக்கறையோடு உள்ள வேளையில், மகளிர் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள மகளிர் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை வேகப்படுத்த வேண்டும்.வளர் இளம் பெண்களுக்கு பள்ளி, கல்லுாரிகளில் தற்காப்பு கலைகளை அரசே கற்றுத் தர வேண்டும். அவர்களுக்கு ஊட்ட சத்து உணவுகளை வழங்க வேண்டும்.மாதர் குலம்தான் இந்த நாட்டின் பெண் சக்தி, பெரும் சக்தி என்ற பெருமையை நிலைநாட்டி வருகிறது என்பதை, ஆண்களுக்கு உணர வைக்க வேண்டும்.இவ்வாறு ஜாஸ்லின்தம்பி கூறினார்.
09-Feb-2025