உள்ளூர் செய்திகள்

தீ விபத்து

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் தனியார் ஓட்டலில் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலின் ஜெனரேட்டர் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை