மேலும் செய்திகள்
விளைந்த நெல்லை பங்கு பிரிப்பதில் அரிவாள் வெட்டு
02-Feb-2025
புதுச்சேரி: புதுச்சேரி, முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் நடராஜன், 2ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, வில்லியனுார் ஏழை மாரியம்மன் கோவிலில் நடந்தது. நடராஜனார் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவர் சரவணன் தலைமையில் திரளான மக்கள் பங்கேற்று, நடராஜன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, பொது மக்களுக்கு புடவை, அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், ஏ.பி.சி., சங்கர், பூபதி, வன்னியர் சங்க தலைவர் மதியழகன், சாமி, கோவில் பொருளாளர் சந்துரு, புகழேந்தி, ராமலிங்கம், வரதராசு, ஆசிரியர் சுப்ரமணி, ஒதியம்பட்டு மூர்த்தி மற்றும் அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
02-Feb-2025