ஆன்லைன் கடன் தருவதாக ரூ.1.38 லட்சம் மோசடி
புதுச்சேரி : ஆன்லைனில் லோன் தருவதாக ஏமாற்றி, பாகூரை சேர்ந்தவரிடம் ரூ.1.38 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.புதுச்சேரி அடுத்த பாகூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் சதீஷ். இவரை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் மூலம் குறைந்த வட்டியில் ரூ. 2 லட்சம் வரை லோன் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய சதீஷ், லோன் பெறுவதற்கு ஆன் லைனில் விண்ணப்பித்தார். அதற்கு, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி மர்ம நபர் கூறியுள்ளார். இதை நம்பிய சதீஷ் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் செலுத்தி, ஏமாந்துள்ளார்.இதேபோல், எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த பஞ்சநாதன் ரூ.9 ஆயிரம், ரெட்டியார்பாளையம் ராகவன் 6 ஆயிரம் என, 3 பேரும், 1 லட்சத்து 53 ஆயிரம் பணத்தை, ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.