உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன் மழலையருக்கான பழங்கள் தினம் நிகழ்ச்சி

முன் மழலையருக்கான பழங்கள் தினம் நிகழ்ச்சி

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் மேயர் ராமலிங்கம் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையருக்கான பழங்கள் மற்றும் சிவப்பு, மஞ்சள் தின நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சரோஜா, சித்ரா முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியை முன்னிட்டு, மாணவர்கள் பழங்கள் போன்று உடை அணிந்தும், பெற்றோர்கள் மூலம் பழங்கள் கொண்டு பல வகை உணவு பொருட்களை தயார் செய்து வந்திருந்தனர். இதில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உண்டியல் பரிசாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ