உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலின விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலின விழிப்புணர்வு நிகழ்ச்சி

வில்லியனுார்: வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்பட்டு வரும் வட்டார அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் பாலின விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்த் டெண்டுல்கர் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், வில்லியனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரனேஸ்வரி, மகளிர் சட்ட ஆலோசனை மைய வழக்கிறஞர் சபீதா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை பாலின நிபுணர் சாந்தாலட்சுமி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பாலின விழிப்புணர்வு குறித்து பேசினார். இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் வில்லியனுார் வட்டாரத்திற்கு உட்பட்ட 42 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைபைச் சேர்ந்த சமூக மேம்பாட்டு உறுப்பினர்கள், பாலின தோழிகள், கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், கணக்காளர்கள், சேவக், திட்ட அலுவலர்கள், வட்டார மேலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை