உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., வேட்பாளருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா வேண்டுகோள்

தி.மு.க., வேட்பாளருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா வேண்டுகோள்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நிர்வாகிகள் மோகன் நகரில் ஓட்டு சேகரித்தனர். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., தி.மு.க., துணை பொதுச்செயலாளர் பொன்முடி, மாநில அமைப்பாளர் சிவா, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் லட்சுமணன் எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி, தி.மு.க., எம்.எல்.ஏக்கள்., செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன், கவுதம் திராவிடமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால்கென்னடி, சம்பத், மூர்த்தி, நந்தா சரவணன், தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ், மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஓட்டு சேகரித்து வருகின்றனர். கண்டமங்கலம் சேர்மன் வாசு உடனிருந்தார். நேற்று மாலை தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., தி.மு.க., அமைப்பாளர் சிவா தலைமையில், தி.மு.க., வினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மோகன் நகரில் ஓட்டு சேகரித்த அவர்கள் பேசியதாவது; முதல்வர் தொகுதி என்று பெயர் பெற்ற தட்டாஞ்சாவடி இன்று எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். வாக்களித்த மக்களை புறந்தள்ளிவிட்டு மங்கலம் தொகுதியை தேர்ந்தெடுத்த ரங்கசாமிக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். கடந்த தேர்தலோடு காங்., கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது. காங்., கட்சிக்கும் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் பிரதான பிரச்னையாக இருக்கும் சுகாதாரமான குடிநீர், தரமான சாலை வசதி, கட்டமைப்புடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்திக் கொடுத்திட மக்கள் தொண்டன் சேது செல்வத்திற்கு ஒரு வாய்ப்பு அளித்து, அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை