உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு வெளிப்படை தன்மையோடு கலந்தாய்வை நடத்த கோரிக்கை

அரசு வெளிப்படை தன்மையோடு கலந்தாய்வை நடத்த கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வெளிப்படை தன்மையோடு கலந்தாய்வை நடத்த வேண்டும் என மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் பாலா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில், கடந்த 2025–26ம் ஆண்டு மூன்று மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 650 இளநிலை மருத்துவ இடங்களில், 242 இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டது. இந்த 2026–27 கல்வியாண்டில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தமாக 750 இடங்களில், 375 இடங்களை அரசு பெற வேண்டும். புதுச்சேரி உயர்கல்வி கட்டணக்குழு தலைவர் நீதிபதி விமலா தலைமையில் கல்வி கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து கூட்டம் நடக்க உள்ளது. தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறும் இடங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். நீட் முடிவுகள் வெளியான நிலையில், சுகாதாரத் துறை இயக்குனரகம், டில்லி தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொண்டு மண்ணின் மைந்தர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும். சென்டாக் நிர்வாகம் நீட் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம், பல் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு விண்ணப்ப படிவங்களை பெற்று தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும். புதுச்சேரி அரசு, துணை மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், செவிலியர் பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளுக்கு வெளிபடைத் தன்மையோடு நடத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ