உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி விதைபந்து தயாரிப்பு  

அரசு பள்ளி விதைபந்து தயாரிப்பு  

புதுச்சேரி: தருமாபுரி, அரசு தொடக்கப் பள்ளியில் ​புவி வெப்பமாதலை தடுக்கும் பொருட்டு, மாணவர்களுக்கான விதைபந்து தயாரிப்பு நிகழ்ச்சி நடந்தது.  பள்ளியின் தலைமையாசிரியர் அனுராதா, பொறுப்பாசிரியர் மஞ்சுபார்கவி தலைமை தாங்கினர். ஆசிரியர்கள் சத்தியரூபாவதி, கோமளா, ஜீவிதா, மதுரைவீரன், பூரணி புவனேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில், மாணவ, மாணவிகள் 1500-க்கும் மேற்பட்ட விதைபந்துகளை தயாரித்தனர். இதனை வட்டம்–2, பள்ளி துணை ஆய்வாளர் செல்வி சரவணன் பார்வையிட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார். மேலும், இப்பள்ளியில் நடந்த விதைப்பந்து தயாரிப்பு முயற்சியை முன்னுதாரணமாகக் கொண்டு, வட்டம்–2ல் உள்ள 32 அரசு பள்ளிகளிலும் விதைப்பந்து தயாரிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.  மாணவ, -மாணவிகளால் தயாரிக்கப்பட்ட விதை பந்துக்கள், மழைக்காலம் துவங்கியதும், சாலையோரங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் விதைக்கப்பட உள்ளன.​ 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை