சுற்றுலா பயணிகளை கவரும் பிரான்ஸ்; பாரம்பரிய கட்டடங்கள் கவர்னர் பெருமிதம்
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், இந்திய-பிரெஞ்சு திருவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று துவங்கியது.இந்திய-பிரெஞ்சு திருவிழா, இரு நாடுகளையும் ஒன்றிணைத்து பகிரப்பட்ட வரலாறு உள்ளிட்டவற்றை நினைவூட்டுகிறது. கலாசாரம், கல்வி, வர்த்தகம் போன்றவற்றுக்கு இது ஒரு சான்றாகும். புதுச்சேரியில் உள்ள பகுதிகள் தற்போதும் பிரான்ஸ் பாரம்பரிய கட்டடங்களை உள்ளடக்கியதாக இருப்பது, சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வதாக உள்ளது.புதுச்சேரி பிரெஞ்சு காலனியாக இருந்தது. இங்கு இன்றும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பிரெஞ்சு மொழியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் வசிக்கும் 6,500 பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்களில் 5,000 பேர் புதுச்சேரியில் வசிக்கின்றனர். புதுச்சேரியில் பிரெஞ்சு கலாசாரம் பின்னி பிணைந்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான உறவை வளர்ப்பது நமது பொறுப்பு. இளைய தலைமுறையினரும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.