உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி முன்னேறி வருவதை கவர்னர் உரை பிரதிபலிக்கிறது அசோக்பாபு எம்.எல்.ஏ., பேச்சு

புதுச்சேரி முன்னேறி வருவதை கவர்னர் உரை பிரதிபலிக்கிறது அசோக்பாபு எம்.எல்.ஏ., பேச்சு

புதுச்சேரி : கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பேசியதாவது:பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளை நிறை வேற்றும் வகையில் கவர்னர் தனது உரையை சட்டசபையில் புதுச்சேரி மக்களுக்காக சமர்பித்துள்ளார். மத்திய அரசின் உதவியுடன் ராஜிவ் சிக்னல் முதல் இந்திரா சிக்னல் வரை உயர் மட்ட மேம்பாலம் அமைக்கவும், மரப்பாலம் முதல் முள்ளோடை வரை கடலுார் சாலையை அகலப்படுத்தப்பட உள்ளது.இதற்காக 1,000 கோடி ஒப்புதலை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஒதுக்கியுள்ளார். இதனை கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டு நினைவு கூர்ந்துள்ளதை வரவேற்கின்றேன்.10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கு முன்னோட்டமாக 2,444 அரசு பணியிடங்கள் நிரப்பி இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய இந்த அரசின் பணியை கவர்னர் பாராட்டி இருப்பது வரவேற்புக்குரியது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி இருப்பதை சட்டசபையில் அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும் வகையில் குறிப்பிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றவும் ஐ.ஐ.டி., பார்க், ஏக்தா மால் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வர கவர்னர் அரும்பாடுபட்டு வருகிறார். புதுச்சேரி முன்னேறி கொண்டு இருக்கிறது என்பதை தனது உரையில் கவர்னர் புள்ளி விவரத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசு மக்களுக்கான அரசு, வளர்ச்சிக்கான அரசு என்று கவர்னர் குறிப்பிட்டுள்ளதை வரவேற்கின்றேன்.கவர்னரின் உரை என்பது அரசினுடைய முன்னேற்ற உரை. இவ்வாறு அவர், பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ