மேலும் செய்திகள்
இலக்குகளை அடைய தேவையான குணநலன்கள்!
03-Mar-2025
நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் முன் மழலையர் வகுப்பிற்கான ஆல் திம்ஸ் டே, மழலையர் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, மாணவர் ஆண்டு மலர் வெளீயிட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.தலைமை ஆசிரியை ரேணுகாம்பாள் தலைமை தாங்கினார். ஆசிரியை ரேணுகா வரவேற்றார். நான்காம் வட்டம் பள்ளி துணை ஆய்வாளர் அமல்ராஜ் லிமாஸ், கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியைகள் இந்திரா பிரியதர்ஷினி, சவிதா வழிகாட்டுதலின்படி, 5ம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய மாணவர் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை, ஆசிரியர் புருேஷாத்தம்மன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் லட்சுமி, வள்ளி செய்திருந்தனர். ஆசிரியை ரஜித்தா நன்றி கூறினார்.
03-Mar-2025