மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
08-Feb-2025
புதுச்சேரி: குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி தியாக முதலியார் வீதியில் பெட்டிக்கடையில், குட்கா விற்பதாக, பெரியக்கடை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. போலீசார் சென்று கடைகளில் ஆய்வு செய்தபோது, சாரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது பெட்டி கடையில், தடை செய்யப்பட்ட கூல் லிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். ஆயிரம் மதிப்பிலான, குட்காவை பறிமுதல் செய்தனர்.
08-Feb-2025