உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறு நாள் வேலை: சபாநாயகர் துவக்கி வைப்பு

நுாறு நாள் வேலை: சபாநாயகர் துவக்கி வைப்பு

அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் 3.83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுாறு நாட்கள் வேலை பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி துறை சார்பில், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் விஜய மாநகர் நிலம் முதல் உப்பனாறு வரை உள்ள வாய்க்காலை துார்வாரி ஆழப்படுத்துதல், மற்றும் முழியான் குளம் முதல் உப்பனாறு வரை உள்ள வாய்க்காலை துார்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளை சபாநாயர் செல்வம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் கணேசன், பா.ஜ.க., மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன் பா.ஜ.க., முன்னாள் தலைவர் லட்சுமிகாந்தன் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை