துாய்மை பணி விழிப்புணர்வு
அரியாங்குப்பம் : துாய்மை இந்தியா திட்டத்தின் சுவச்சதா ஹை சேவா எனும் துாய்மை பணி, இரு வார விழாயையொட்டி, கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனை எதிரே நடந்த நிகழ்ச்சியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். துாய்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர்கள் சுரேஷ், சரஸ்வதி, எச்.ஆர்.ஸ்கொயர் பொது மேலாளர் விஸ்வநாதன், பா.ஜ., பிரமுகர்கள் ராமு, மாவட்ட தலைவர் சுகுமாரன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.