உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலாஜி வித்யா பீத் பல்கலை.,யில் அலையன்ஸ் பிரான்சிஸ் துவக்கம்

பாலாஜி வித்யா பீத் பல்கலை.,யில் அலையன்ஸ் பிரான்சிஸ் துவக்கம்

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் இணைப்பு பிரிவு, எம்.ஜி.எம். மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் செரின் ஆர்காடியா அமைதி பூங்கா ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது.புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் சதீஷ் நல்லாம் வரவேற்றார். பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குனர் லாரண்ட் ஜலிக்கோஸ், பிரெஞ்சு பாடத்திட்டங்கள் குறித்தும், இந்தியா - பிரெஞ்சு நாடுகளுக்கு இடையே கல்வி தொடர்பான பரிமாற்றம் குறித்தும் விளக்கினார்.துணைவேந்தர் நிகர் ரஞ்ஜன் பிஷ்வாஷ் சிறப்புரையாற்றினார். புதுச்சேரி மற்றும் சென்னைக்கான பிரெஞ்சு துணை துாதர் லிஸ் டால்போட் பரே வாழ்த்தி பேசினார். பிரெஞ்சு நாட்டின் இந்தியாவிற்கான துாதர் தியரி மாத்துா, எம்.ஜி.எம். மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி அலைன் பிரான்சிஸ் இணைப்பு பிரிவு மற்றும் செரின் ஆர்கானியா அமைதி பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார். கல்வி ஒருங்கிணைப்பாளர் மேரி அலைன் அர்டிசன் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் நிர்மல்குமார், நிர்வாக அதிகாரி ஆஷா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை