உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் புதுப்பிப்பு பணி துவக்கி வைப்பு

கோவில் புதுப்பிப்பு பணி துவக்கி வைப்பு

நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் பிடாரியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.நெட்டப்பாக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பிடாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக காலை 9.00 மணிக்கு பாலஸ்தாபன வைபவம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் நடந்தது. தொடர்ந்து கோவில் புதுப்பிக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ