உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இண்டியா கூட்டணி பயன்படாத வண்டி

இண்டியா கூட்டணி பயன்படாத வண்டி

அ.தி.மு.க., அன்பழகன் காட்டம் புதுச்சேரி: உப்பளம் அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஜெ.,பிறந்த நாள் விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;தமிழ் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா, 5 முறை தமிழத்தின் முதல்வராக இருந்தபோது, ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்காக பாடுபட்டார். மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை உறுதியாக எதிர்த்தவர். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், தி.மு.க., அரசு அடக்குமுறையை கையாள்கிறது.புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மற்ற அரசியல் கட்சி தலைவர்களையும், அவரது குடும்ப பெண்களையும் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு தொடுப்பேன், சி.பி.ஐ.க்கு அனுப்புவேன் என வாய் ஜாலம் காட்டி வருகிறார். புதுச்சேரியில் பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி அரசு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளது.இண்டியா கூட்டணியும் வாய்க்கு வந்தபடி ஓடாத வண்டி, ஓடுகிற வண்டி என விமர்சனம் செய்து கொண்டு உள்ளது. இண்டியா கூட்டணி முழுமையாக சேதமடைந்து பயன்படாத வண்டி.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பா.ஜ., மாநில அந்தஸ்து, மத்திய நிதி குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது உள்ளிட்ட மாநில உரிமையை வழங்காமல் துரோகம் இழைக்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !