உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடுக்குமாடி குடியிருப்பு கோரி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

அடுக்குமாடி குடியிருப்பு கோரி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : பாவாணர் நகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய அரசு அடுக்குமாடி குடியிருப்பை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தரக்கோரி, இந்திய கம்யூ., உழவர்கரை தொகுதிக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.குடிசை மாற்று வாரியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் எரிக் ரம்போ, தொகுதிக்குழு உறுப்பினர் அஞ்சலிதேவி, கிளை செயலாளர் சிந்தாமணி, பொருளாளர் ஜெயின் அந்தோணிதாஸ் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாரா கலைநாதன் கண்டன உரையாற்றினர்.அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது வசித்து வரும் மக்களுக்கே பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநிலக்குழு உறுப்பினர்கள் தேவசகாயம், முரளி, முன்னாள் தொகுதி செயலாளர் நளவேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை