சர்வதேச மகளிர் தின விழா
புதுச்சேரி : புதுச்சேரி தி.மு.க., மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், சர்வதேச மகளிர் தின விழா வில்லியனுாரில் நடந்தது.தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி வரவேற்றார். செய்தி பிரிவு மாநில துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி, அவைத் தலைவர் சிவக்குமார், சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, நந்தா சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குமரவேல், முன்னாள் பாராளுமன்ற செயலர் மூர்த்தி மற்றும் தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய அரசிற்கு கண்டனம் தெரிவிப்பது. புதுச்சேரியில் உழைக்கும் மகளிருக்கான உரிய ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்காத மகளிர் மேம்பாட்டு துறை மற் றும் தொழிலாளர் நலத் துறைக்கு கண்டனம் தெரிவிப்பது. புதுச்சேரி பெண்களுக்கான பிங்க் பேருந்துகள் இயக்க வலியுறுத்துவது.ரேஷன் கடைகளை திறந்து குறைந்து விலையில் மளிகை பொருட்களை வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்திட போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, 2026 தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வில்லியனூர் தொகுதி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.