உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘ஜனநாயகன்’ மூன்று தியேட்டர்களுக்கு அனுமதி 

‘ஜனநாயகன்’ மூன்று தியேட்டர்களுக்கு அனுமதி 

புதுச்சேரி: ஜனநாயகன் திரைப்படம் புதுச்சேரியில் சிறப்பு காட்சியாக வெளியிட மூன்று தியேட்டர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (23ம் தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியாக உள்ளது.  இதையொட்டி, புதுச்சேரியில் மட்டும் 13 தியேட்டர்களில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதில், திருக்கனுார்– சுதா, வில்லியனுார்– அசோக், காமராஜர் சாலை– ஜிவா ஆகிய மூன்று தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இருப்பினும், காலை 7 மணிக்கு பதிலாக, 9 மணிக்கு படத்தை திரையிட வேண்டுமென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !