மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
23-Feb-2025
புதுச்சேரி : பிரஞ்சு பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 8ம் தேதி நடக்கிறது. எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்டூர்சாமி வெளிட்டுள்ள செய்திகுறிப்பு; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான, தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சேவை மையம் இணைந்து, அனைத்து சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம், வரும் 8ம் தேதி, புதுச்சேரி ஒயிட் டவுன், சுய்ப்ரேன் வீதி, அலையன்ஸ் பிரான்ஸில், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கிறது.தனியார் நிறுவனமான டாடா கன்சல்டன்சியில், பிரஞ்சு ட்ரான்ஸ்லேட்டர் வேலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளநிலை அல்லது முதுநிலை பிரஞ்சு மொழி படித்த பட்டதாரிகள் முகாமில் பங்கேற்கலாம். பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றிதழ் உண்மை நகலுடன் வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23-Feb-2025