காரைக்கால்மேடு மாணவிகள் புதுச்சேரிக்கு கள பயணம்
புதுச்சேரி : புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைகழகத்தில் காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் கள பயணம் மேற்கொண்டனர்.காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் முதல்வர் சந்தானசாமி வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிதி ஆயோக் இந்திய அரசின் அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ் இயங்கும் அடல் இங்குபேஷன் சென்டருக்கு தொழில்நுட்ப பயணம் மேற்கொண்டனர்.தலைமை செயலர் அதிகாரி விஷ்ணு வர்த்தன் மாணவிகளை வரவேற்றார். எலட்ட்ரானிக்ஸ் டிசைன், இண்டர்நெட் ஆப் திங்ஸ், ஆளில்லாத பறக்கும் வாகனம் உள்ளிட்ட பொறியியல் தொழில்நுட்ப களங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.தொழில் துவங்குவதல், சந்தைப்படுத்தல், வியாபார சுரண்டல் குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, சென்டரின் பல வகையான பொறியியல் தொழில்நுட்ப தொழில் முனைவு தொடக்க கட்டமைப்பு வசதிகளை மாணவிகள் பார்வையிட்டனர்.விரிவுரையாளர்கள் விமலன், ராஜபாலன், வெண்ணிலா, ஆய்வக பயிற்றுவிப்பாளர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.