உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அகரம் ஸ்காலர்ஸ் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்

அகரம் ஸ்காலர்ஸ் பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம்

பாகூர்: குடியிருப்புபாளையம் அகரம் ஸ்காலர்ஸ் அகாடமி பள்ளியில், கராத்தே பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. பள்ளி தாளாளர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்க செயலாளர் ஷீகான் கராத்தே வளவன் கலந்து கொண்டு கராத்தே பயிற்சி முகாமினை துவக்கி வைத்து பேசுகையில் ‘மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பு, பள்ளி மற்றும் கல்லுாரி விளையாட்டு ஒதுக்கீட்டு வாய்ப்புகள், அரசு வேலை வாய்ப்புகளில் கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினர். சங்க இணைச் செயலாளர் பாலச்சந்தர் நோக்வுரையாற்றினார். உறுப்பினர் செந்தில் வாழ்த்தி பேசினார்.  மூத்த பயிற்சியாளர்கள் செம்பை நீலவேணி, சவுமியா ஆகியோர் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்தனர். ஆசிரியர் இலக்கியா தொகுப்புரையாற்றினார்.  ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் ராதிகா, பார்கவி ராஜேஸ்வரி, நித்தியலட்சுமி, பிரவினா, பார்கவி, ஊழியர் சுவாதி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை