கர்நாடக உள்துறை அமைச்சர் சனி பகவான் கோவிலில் தரிசனம்
காரைக்கால்: காரைக்காலில் சனி பகவான் கோவிலில் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனிசன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலுக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா குடும்பத்துடன் நேற்று வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின், அமைச்சர் குடும்பத்துடன் தர்ப்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார். தொடர்ந்து, சனி பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து 9 தீபம் ஏற்றி காக்கைக்கு எள்ளு சாதம் வழங்கி பகவானை தரிசனம் செய்தார்.