உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கற்பக விநாயகர் கோவில் கும்பாபி ேஷகம்

கற்பக விநாயகர் கோவில் கும்பாபி ேஷகம்

புதுச்சேரி: செல்லஞ்சேரி மதுரா, கம்பிளிகாரன்குப்பம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், எல்லையம்மன், பூரணி புஷ்கலாம்பிகை உடனுறை வில்வமணி அய்யனார் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, மந்திர ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, 8:45 மணிக்கு கடம் புறப்பாடு, 9.30 மணிக்கு வில்வமணி அய்யனார் கோவில் கும்பாபிேஷகம், 10:00 மணிக்கு எல்லையம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை