உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருஷ்ண ஜெயந்தி சிலைகள் விற்பனை

கிருஷ்ண ஜெயந்தி சிலைகள் விற்பனை

புதுச்சேரி: கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக காந்தி வீதியில் ஏராளமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவுக்காக வீடுகளில் வைத்து வழிப்பட புதுச்சேரி காந்தி வீதியில் ஏராளமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தவழும் குழந்தை கிருஷ்ணர் சிலை, வெண்ணை பானையுடன் கூடிய கிருஷ்ணர் என பல வடிவங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. குழந்தை பேறு இல்லாத தம்பதிகள், தவழும் கிருஷ்ணர் சிலையை வாங்கி சென்று வழிபடும் நம்பிக்கை உள்ளதால், ஏராளமானோர் தவழும் கிருஷ்ணர் சிலை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !