மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
11-Aug-2024
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
11-Aug-2024
புதுச்சேரி: கீழ்ப்புத்துப்பட்டு அய்யனார் கோவிலில், வரும் செப்., 5ம் தேதி கும்பாபி ேஷக விழா நடக்கிறது.மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு கிராமத்தில், அய்யனார் கோவிலில், கும்பாபிேஷக விழா வரும், செப்., 2ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. வரும், 3ம் தேதி காலை மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பல்வேறு ேஹாமங்கள் நடக்கின்றன.அன்று மாலை கலசங்கள் யாக சாலையில் பிரவேசம் செய்து, முதல் கால பூஜை துவங்குகிறது. , 4ம் தேதி காலை இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடக்கிறது. 5ம் தேதி காலை, 7:30 மணிக்கு கலசங்கள்புறப்பாடும், தொடர்ந்து செல்வ விநாயகர், நடமாடும் சித்தர் பீடம், நாக கன்னி புற்று அம்மன், குதிரை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு சன்னிதிகளில் கும்பாபிேஷகம் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு ராஜகோபுரத்திற்கும், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு அய்யனார் திருக்கல்யாண வைபவம், இரவு 10:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி மண்டல பூஜை துவங்குகிறது. விழாவில், வேதாகம திருமுறை, சமய சொற்பொழிவு, இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிககள் நடக்க உள்ளன.
11-Aug-2024
11-Aug-2024