உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி பலி

நெட்டப்பாக்கம்: மடுகரை குருநகரை சேர்ந்தவர் அண்ணாமலை, 54; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள அவர், அடிக்கடி குடித்துவிட்டு, மதுக்கடையில் தூங்குவது வழக்கம். இவர், நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு, வீட்டிலிருந்து மது கடைக்கு சென்றார். இரவு முழுதும் வீட்டிற்கு வரவில்லை. நேற்று காலை, அவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார், உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில்,மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை