உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிங்கப்பூராக மாற்றுவோம்! புதுச்சேரியில் பழனிசாமி வாக்குறுதி

சிங்கப்பூராக மாற்றுவோம்! புதுச்சேரியில் பழனிசாமி வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: ''அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றி அமைப்போம்,'' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உறுதி அளித்தார். புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அவர் பேசியதாவது:புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வெகு நாட்களாக போட்டியிடவில்லை; தற்போது போட்டியிடுகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்துஸ்து இல்லாததால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பட முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. இதை நீக்கி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும்.தமிழ்வேந்தனுடன் தமிழகத்தில் வெற்றி பெறும், 39 பேரும் சேர்ந்து, மாநில அந்தஸ்துக்காக அழுத்தம் கொடுத்து பெறுவர். மாநில அந்தஸ்து கிடைத்தால் தான் புதுச்சேரிக்கு உரிய நிதிப்பகிர்வு கிடைக்கும்.கடந்த 43 ஆண்டுகளாக புதுச்சேரியை காங்., - தி.மு.க., - என்.ஆர். காங்., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. அவர்களால் மாநில உரிமைகளை மீட்க முடியவில்லை. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் உரிமையை பெற முடியும். அதற்கான தில், திராணி, தெம்பு அ.தி.மு.க.,விடம் தான் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். தேர்தலின் போது அளிக்கும் வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்தால் கவர்னர் மனது வைத்தால் தான் நிறைவேற்ற முடியும் நிலை உள்ளது. முதல்வரால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.அ.தி.மு.க., வெற்றி பெற்றால் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றி அமைப்போம். சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், புதுச்சேரியை அழகு நகராக உருவாக்க முடியும்.புதுச்சேரி வளர்ச்சி பெற அடுத்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். அதற்கு இந்த தேர்தல் தான் பிள்ளையார் சுழி. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
மார் 31, 2024 20:53

உங்கள் பங்காளி திமுக கட்சி ஆள் ஒருத்தர் ஏற்கெனவே சென்னையை.... ஜப்பானாக மாற்றி விட்டார்.... நீங்கள் சிங்கப்பூர் போல மாற்ற போகிறீர்களா ???


பேசும் தமிழன்
மார் 31, 2024 20:28

ஏற்கெனவே நீங்கள் தமிழ்நாட்டை ..... சிங்கப்பூராக மாற்றியது போதும் ....அந்த லட்சணத்தை தான் நாட்டு மக்களும் பார்த்தார்களே. !!!


Rama adhavan
மார் 31, 2024 17:13

இது ஓரு புருடா வாக்குறுதி. இன்னும் 1000 ஆண்டு ஆனாலும் 240 சதுர km புதுவை சிங்கப்பூர் ஆகாது. இவர் கட்சியோ காங்கிரஸ், பிஜேபி இரு கட்சிக்கும் எதிரி.


HoneyBee
மார் 31, 2024 12:42

முதலில் தமிழ்நாடாக இருக்க வழி தேடுங்க சினிமால அங்கு வரி கம்மி இத்தனை டாக்டர்கள் என்று சொன்னதை போல கதை விடாதீக


Palanisamy Sekar
மார் 31, 2024 11:31

சிங்கப்பூரில் மெட்ரோ ரயில் சேவைகளிலேயே வந்துடுச் இப்போதான் இங்கே பில்லர் போடுறீங்க சிங்கப்பூரில் எதிர்கால இருபத்தைந்தாம் ஆண்டுக்கு ஏற்றபடி சாலைவசதிகள் தண்ணீர் தேவைகள், மின்சார தேவைகளை இப்போதிருந்தே திட்டமிட்டு செய்கின்றார்கள் ஒரே ஓர் வினாடி நீர் வரத்து தடைப்பட்டதில்லை மின்சாரம் தடை என்பதே இங்கே சரித்திரத்திலேயே கிடையாது ஆனால் நீங்களோ எந்த திட்டமும் போடமாட்டீர்கள்அப்படியே மத்தியில் போட்டாலும் அதனை சம்பந்தி மாமன் மச்சான்னு கொடுத்துவிட்டு கமிஷன் பார்ப்பீர்கள் அப்புறம் எப்படி சிங்கப்பூர் மாதிரி செய்வீர்கள்? வாய்க்கு வந்தபடி கப்ஸாஅளப்பது தானே இந்த திராவிடர்களின் வாய்சவடால் இன்னொருமுறை சிங்கப்பூரு ன்னு சொல்லிட்டு வந்துடாதீங்க கடுப்பேத்தறார் மை லார்ட்


மணியன்
மார் 31, 2024 11:13

நாலரை ஆண்டு ஆட்சியில் உங்கள யார் சிங்கப்பூர் ஆக்க வேண்டாமென்று சொன்னது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலாவது கமிஷன் வாங்காமல் இருந்திருந்தா இப்ப கான்க்ரீட் ரோடெல்லாம் பல்லிளிக்காமல் நல்லா இருந்திருக்குமே.


ஆரூர் ரங்
மார் 31, 2024 10:13

கோடநாடாக்குவேன் என பொருத்தமாகக் கூறி இருக்கலாம்


அப்பண்ணா
மார் 31, 2024 09:31

இப்பிடித்தான் மதுரையை சிங்கப்பூராக்குவேன்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டு திரிஞ்சாரு ஒரு முருக சாமி


ராமகிருஷ்ணன்
மார் 31, 2024 09:03

இத்துபோன இந்த டயலாக்கை மாத்தி தொலைங்கடா. உலகநாடுகள் எல்லாம் மோடி போன்ற தலைவர் வேணும் என்று சொல்லும் போது 40 வருட பழைய டயலாக்கை தூக்கிட்டு வந்துட்டான்.


குமரி குருவி
மார் 31, 2024 08:52

கூவத்தூராக மாற்றாமல் விட்டால் சரி


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி