உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வோம்

சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வோம்

புதுச்சேரி : சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வோம் என பாண்டிச்சேரி கிரிக்கெட் வீரர்கள் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.இது கிரிக்கெட் வீரர்கள் நலச்சங்க தலைவர் சாய்ஜி, சி.ஏ.பி., முன்னாள் கவுரவ செயலாளர் சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷனான சி.ஏ.பி., சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி, சாதித்து வருகின்றது. சி.ஏ.பி., சார்பில் உலகதரம் வாய்ந்த கிரிக்கெட் வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் 8 மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஒளி வெள்ளத்தை பாய்ச்ச கூடிய மிகப்பெரிய மைதானமாகும். பள்ளி, கல்லுாரி, கிராமப்புறம் பெறுநிறுவனங்களுக்கு இலவசமாக லீக் போட்டியை நடத்தி வருகின்றது. இந்தியாவிற்கான சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். துணை தலைவர் சந்தோஷ்குமார், பொருளாளர் கதிர்வேல், செய்தி தொடர்பாளர் சாரதா, இணை செயலாளர் திவாகர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை