உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மெக்கானிக்கை தாக்கிய லோடுமேன் கைது

மெக்கானிக்கை தாக்கிய லோடுமேன் கைது

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் மெக்கானிக்கை தாக்கிய காஞ்சிபுரம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் முருகன், 45, மோட்டார் பைக் ஒர்க் ஷாப் நடத்தி கொண்டு, சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து வந்த பால் ஏற்றி வந்த வேன், ஒர்க் ஷாப் அருகே உள்ள கடையில் பாலை இறக்கி விட்டு, வாகனத்தை பின்னால் எடுத்தனர். அப்போது, முருகனின் ஆட்டோ மீது மோதுவது போல் வேன் வந்தது. இதனால் முருகனுக்கும், பால் இறக்கும் லோடுமேன் காஞ்சிபுரத்தை சேர்ந்த முத்துவேல், 27; என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த லோடுமேன், முருகனை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, முத்துவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ