உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விலைவாசி உயர்வை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: விலைவாசி உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  தட்டாஞ்சாவடி, குடிமைப்பொருள் வழங்கல் துறை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., நகர கமிட்டி செயலாளர் ஜோதி பாசு தாலை தாங்கினார். உழவர்கரை கமிட்டி செயலாளர் ராம்ஜி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராமசந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா ராமசந்திரன் கலியமூர்த்தி, சத்யா, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை