உள்ளூர் செய்திகள்

மாயஜால: பட்ஜெட்

புதுச்சேரி: மக்களை ஏமாற்றும் மாயாஜால பட்ஜெட் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக சேர்மன் வெங்கட்டராமன் தெரிவித்துள்ளார்.அவர், கூறியதாவது; முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி அரசு அறிவித்து இருக்கும் பட்ஜெட், மக்களை ஏமாற்றுவதற்காகவே விஞ்ஞான ரீதியில் திட்டம் போட்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். விலைவாசியை கட்டுப்படுத்தவோ, பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி., வரி குறைப்பு பற்றியோ பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.புதுச்சேரி வளர்ச்சிக்கான எந்த திட்டமும் இல்லை. மகளிருக்கான உரிமை தொகை 2,500 ரூபாய் உயர்த்தி கொடுப்போம் என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் எதிர்வரும் சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு விஞ்ஞான ரீதியில் திட்டம் போட்டு வார்த்தை ஜாலங்களுடன் மக்களை ஏமாற்ற அறிவிக்கப்பட்ட மாயாஜால பட்ஜெட் ஆகும்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை