மேலும் செய்திகள்
இன்று இனிதாக (15.02.2025) செங்கல்பட்டு
15-Feb-2025
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது.விழாவையொட்டி, 26ம் தேதி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, முதல்கால பூஜை, இரவு 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 2ம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை 3ம் கால பூஜை, அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 4ம் கால பூஜை நடக்கிறது.மகா சிவராத்திரி விழாவிற்கு, அபிஷேக பொருட்கள் கொடுக்க விரும்பும் பக்தர்கள், 26ம் தேதி மாலை 4:00 மணிக்குள், தேவஸ்தானத்தில் கொடுக்கலாம் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகா சிவராத்திரி விழாவையொட்டி, தேவஸ்தான கலையரங்கில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை தொடர் அன்னதானம் நடக்கிறது.
15-Feb-2025