ஆபாசமாக பேசியவர் கைது
காரைக்கால்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் திருப்பட்டினம் பகுதியில், நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். திருப்பட்டினம் மேலையூர் பகுதியில், பொது இடத்தில் ஆபாசமாக பேசிய அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.