மருத்து ஊழியரை தாக்கியவருக்கு வலை
: புதுச்சேரி: காரில் சென்ற மருத்துவமனை ஊழியரை தாக்கியவரை போலீசார் தேடிவருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 29; இவர் திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி செய்து வருகிறார். இவர் புதுச்சேரி காந்தி வீதி சிவன் கோவில் வழியாக நேற்று முன்தினம் காரில் சென்றார். அந்த வழியாக சென்ற ரமேஷ் என்பவர் காரை நிறுத்தி, கதவை திறந்து அவரை தாக்கினார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, ரமேைஷ தேடிவருகின்றனர்.