மேலும் செய்திகள்
எம்.ஐ.டி., கல்லுாரியில் சாப்ட்வேர் பயிலரங்கம்
19-Feb-2025
புதுச்சேரி: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு சார்பில், ஐடியா லேப் டெக் பெஸ்ட் 2025 கண்காட்சி டில்லியில் நடந்தது.இதில் 76க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன. கண்காட்சியில் கண்காட்சியாளர்கள், வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் கலந்துகொண்டு விவசாயம், தண்ணீர் சேமிப்பு, நிலையான நகர வளர்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுக் காணவும், புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை மேம்படுத்தவும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.இதில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி சார்பில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை டீன் வேல்முருகன், மெக்கானிக்கல் பொறியியல் துறை உதவி பேராசிரியர் மார்டின், மெகாட்ரானிக்ஸ் துறை மாணவர் ருத்ரேஷ் மற்றும் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் துறை மாணவர் முகேஷ்குமார் ஆகியோர் அகில இந்திய தொழில்நுட்பம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் காட்சிப்படுத்திய குடிநீரை சுத்தப்படுத்த உதவும் குளோரின் சோதனை கருவியின் ஒரு நிமிட முடிவுகள் திட்டத்திற்கு முதல் பரிசை வென்று, 1 லட்சம் ரூபாய் பரிசு பெற்றனர்.வெற்றி பெற்ற மணக்குள விநாயகர் ஐடியா லேப் குழுவினரை, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், நிதி செயலாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் வாழ்த்தினர்.
19-Feb-2025