உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நினைவேந்தல் நிகழ்ச்சி

நினைவேந்தல் நிகழ்ச்சி

புதுச்சேரி : அரியாங்குப்பம் மணவெளி திலகர் வீதியில் உள்ள அரிச்சுவடி மனநலம் குன்றிய சுகாதார மையத்தில், அரிச்சுவடி டிரஸ்டி ஜெயலட்சுமியின் 3ம் ஆண்டு நினைவு வேந்தல் நிகழ்ச்சி நடந்தது.சிறப்பு விருந்தினராக பாஸ்கர் எம்.எல்.ஏ., பங்கேற்று, ஜெயலட்சுமியின் உருப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதியோர்கள், பெண்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினர்களை அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் இளவழகன், அத்திச்சூடி சிறப்பு பள்ளி தாளாளர் சத்தியவண்ணன், அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி அரிக்கமேடு போர்ட் முன்னாள் தலைவர் சதிஷ்குமார், கோதை சதீஷ்குமார், கலைச்செல்வி, பிரசாத், சங்கர், கணேஷ், ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ