உள்ளூர் செய்திகள்

பால் குடம் ஊர்வலம்

அரியாங்குப்பம்: நல்லவாடு தில்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது. தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தில்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வான நேற்று காலை பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தொகுதியில் வெற்றி பெற்ற ராமு உட்பட பலர் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை