உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பாகூர்: பாகூர் சித்தேரி இரண்டாம் நிலை நீர்வரத்து வாய்க்கால் துார்வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில், பாகூர் சித்தேரி இரண்டாம் நிலை நீர்வரத்து வாய்க்காலை ரூ.8.39 லட்சம் மதிப்பில் துார்வார முடிவு செய்தனர். இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கெண்டு பூமி பூஜை செய்து வாய்க்கால் துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணி துறை உதவி பொறியாளர் ஸ்ரீநாத், இளநிலை பொறியாளர் சின்ராசு உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை