உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொம்பாக்கத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கொம்பாக்கத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: கொம்பாக்கம் பிரியதர்ஷினி நகரில் சாலை அமைப்பதற்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.  வில்லியனுார் தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கம் பிரியதர்ஷினி நகரில், புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில்,  ரூ.30:41 லட்சம் திட்ட மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று  பூமி பூஜை நடந்தது. பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்ட செயற்பொறியாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.எல்.ஏ.,  பங்கேற்று பூமி பூஜை செய்து, சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (மத்திய) கோட்ட உதவிப் பொறியாளர் பிரபாகர், இளநிலைப் பொறியாளர் முருகன், ஒப்பந்ததாரர் ராஜக்கண்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ