மேலும் செய்திகள்
குழந்தை திடீர் சாவு கடலுார் அருகே சோகம்
29-Jun-2026
புதுச்சேரி: மது குடித்ததை தாய் கண்டித்ததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சாரம், முத்தமிழ் நகரில் வசித்தவர் கலைவாணன் மகன் ஹரிஹரன்,26; குடிக்கு அடிமையான இவர், நிரந்தரமாக எந்த வேலைக்கும் செல்வதில்லை. இதனை அவரது தாய் சுமதி கண்டித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாய் கண்டித்ததால், விரக்தியடைந்த ஹரிஹரன் பினாயில் குடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வந்த ஹரிஹரனை தாய் சுமதி மீண்டும் கண்டித்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டு பெட்ரூமில் துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Jun-2026