உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ்காந்தி மருத்துவமனையில் நாளை எம்.ஆர். ஐ.,ஸ்கேன் திறப்பு

ராஜிவ்காந்தி மருத்துவமனையில் நாளை எம்.ஆர். ஐ.,ஸ்கேன் திறப்பு

புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ரூ.11.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ., ஸ்கேன் நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ராஜிவ் காந்தி அரசு மகளிர், குழந்தைகள் மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இல்லாமல் பல ஆண்டுகளாக நோயாளிகள் அவதியடைந்து வந்தனர்.இதற்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, காரைக்கால் அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு பல கோடி ரூபாய் செலவில் புதிதாக மூன்று எம்.ஆர்.ஐ., ஸ்கேன்கள் வாங்கப்பட்டது. அவற்றை பொருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் புதுச்சேரி ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு 11.50 கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ள '1.5 டெஸ்லா' எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பொருத்தும் பணி முடிவடைந்துவிட்டது.இதனை நாளை, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

படம் விளக்கம்.

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 11.50 கோடி ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள '1.5 டெஸ்லா' எம்.ஆர்.ஐ., ஸ்கேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை