உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இசை சங்கம் நிகழ்ச்சி

இசை சங்கம் நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி, தமிழகம் மாவட்ட சஷம் மற்றும் குருபோகர் இசைக் கூடம், சூரியா இசைப் பள்ளி இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான, இசை சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த நிகழ்ச்சியில், சஷம் செயலாளர் அருள் வரவேற்றார். தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். கேசவேலு முன்னிலை வகித்தார். கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் சாண்டில்யன் வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், சூரியா இசைப் பள்ளியின் நிறுவனர் பிரபா குருமூர்த்தி சிறப்புரையற்றினர். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், தெய்வசிகாமணி, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மகளிர் பிரிவு தலைவர் மகாலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ