மேலும் செய்திகள்
கும்பாபிேஷக விழா
24-Aug-2024
புதுச்சேரி: முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபி ேஷக விழா விமர்சையாக நடந்தது.புதுச்சேரி, முத்து மாரியம்மன் கோவில் வீதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவி லில் மகா கும்பாபிேஷக விழா கடந்த 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. முதல் நாளில் மகாசங்கல்பம், மகா கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், தன பூஜை, கோ பூஜை, மங்கள ேஹாமங்கள் விமர்சையாக நடந்தது.இரண்டாம் நாளான 22ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், மங்கள ேஹாமங்கள், தீபாராதைன நடந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகா கும்பாபிேஷக விழா நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து தீபாராதனை, கலச புறப்பாடு நடந்தது. காலை 8:15 மணிக்கு புதிய ராஜகோபுர விமானங்களுக்கு கும்பாபி ேஷகம், 8:45 மணிக்கு கணபதி முதலான பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. 9:10 மணியளவில் முத்துமாரியம்மனுக்கு மங்கள மகா கும்பாபிேஷகம் விமர்சையாக நடந்தது.விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலர் நெடுஞ்செழியன், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.மேலும், அன்னபெரும் படையல், மகா தீபாராதனை, மகா அபிேஷகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு முத்துமாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
24-Aug-2024