மேலும் செய்திகள்
செடல் திருவிழா துவக்கம்
07-Aug-2024
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன், ரேணுகாம்பாள், நாகாத்தம்மன் கோவிலில் செடல் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதையொட்டி இன்று மாலை 4 மணிக்கு அய்யனாரப்பனுக்கு ஊரனி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், நாளை காலை 7 மணிக்கு சக்தி கரகம் புறப்படுதல், மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுதல், கும்பம் கலைத்தல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 4ம் தேதி முதல் 7 ம் தேதி வரை இரவு சுவாமி வீதியுலாவும், 6ம் தேதி மதியம் 2 மணிக்கு சக்தி கரகம் எடுத்து வந்து, செடல் உற்சவம் நடக்கிறது. 7 ம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சளர் நீர் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
07-Aug-2024