உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நவோதயா வித்யாலயாவில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நவோதயா வித்யாலயாவில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நவோதயா வித்யாலயாவில் 6ம் வகுப்பில் சேருவதற்காக நடத்தப்படும் தெரிவு நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவரம்பு  நீட்டிக்கப்பட்டுள்ளது. நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 6ம் வகுப்பில் சேருவதற்கான நடத்தப்படும் தெரிவு நிலைத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் காலவரம்பு வரும் 7ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் www.navodaya.gov.inஅல்லது https://cbseitems.rcil.gov.inஎன்ற இணைய தளத்தில் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி